குறித்த ஒரு விடயம் சம்பந்தமாக கிடைக்கக்கூடிய அனைத்தையும் தேடுவதும் துருவுவதும் எனது பழக்கம்.
யுத்தம் சம்பந்தமான படங்களை கடந்த பல வாரங்களாக பார்த்து வருகிறேன்.
எமது ஒரு தலைமுறை முழுமையாக யுத்தத்தில் ஈடுபட்டு அழிந்து விட்டது. எனினும் தமிழில் யுத்தம் சம்பந்தமான படங்களோ புத்தகங்களோ மிகவும் அரிது.
ஒருவேளை இதுவே அந்த நாசகார யுத்தத்துக்கு காரணமோ...? நவீன தமிழ் சமூகத்துக்கு (எங்களுக்கு) யுத்தம் புதிது. அதில் ஒரு போதை இருந்தது போலப் படுகிறது.
மேலைத்தேய சமூகம் நவீனமயப்படுத்தப்பட்ட சமகாலத்திலேயே பாரிய யுத்தங்களையும் நடாத்தியது. அதன் விளைச்சல்களையும் விளைவுகளையும் எதிர்கொண்டது. விளைச்சல்களை முதலிட்டு பணமாக்கியது. விளைவுகளைப் படிப்பினையாக்கி கொண்டது.
WW II முடிந்து அறுபத்தைந்து ஆண்டுகள் கழிந்த பிறகும், இக்கணம் வரை தொடர்ந்தும் யுத்தம் சம்பந்தமாக அவர்கள் எழுதியும் படமாக்கியும் வருகிறார்கள். அவை பெரும்பாலும் உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட உடன்நிகழ்கால சரித்திரங்கள்.
எங்களுக்கு, சரித்திரம் என்பதன் தொனியே அரசர்களின் பள்ளிப்படைக் கோயில்களுக்குள்ளும் அந்தப்புரங்களுக்குள்ளும் புதைந்து போயிருக்கிறது. சிவகாமியின் முடிச்சிடாத கூந்தல் சிடுக்குகளுக்கும், பழுவேட்டரையரின் அறுபத்திநான்கு விழுப்புண்களில் மொய்க்கும் ஈக்களுக்கும் அப்பால் எமது வரலாறு போக மறுக்கிறது.
நவீன வரலாறு பற்றிய பிரக்ஞை எங்களிடம் இல்லை. வரலாறு என்பது அரசர்களினதும் ஆட்சியாளர்களினதும் கதைகள் அல்ல, மாறாக என்றுமே தோற்றுக்கொண்டிருக்கும் மக்களது ஓலங்கள் என்பது எமக்கு உறைப்பதே இல்லை.
எல்லா நவீனங்களையும் மேலைத்தேயங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நாம் இந்த விடயத்தில் கோட்டை விடுகிறோம். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து யுத்தம் சம்பந்தமான திரைப்படங்களை பார்த்ததில் ஒரு முக்கியமான விடயத்தை அவதானித்தேன்.
எல்லா நவீனங்களையும் மேலைத்தேயங்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நாம் இந்த விடயத்தில் கோட்டை விடுகிறோம். கடந்த சில வாரங்களாக தொடர்ந்து யுத்தம் சம்பந்தமான திரைப்படங்களை பார்த்ததில் ஒரு முக்கியமான விடயத்தை அவதானித்தேன்.
WW I இல் அல்லது அதற்கு முன்னர் நிகழ்ந்த மன்னர் கால யுத்தங்களை விட WW II இலும் அதற்குப் பின்னரும் நிகழ்ந்த, இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கிற யுத்தங்களில் கொடூரமான படுகொலைகளும் பழி வாங்கும் உணர்வும் மிக அதிகரித்துள்ளன. யுத்தங்களின்போது கடைப்பிடிக்க வேண்டிய விதிகளும் கட்டுப்பாடுகளும் அலட்சியப்படுத்தப்படுகின்றன.
அதற்கு அரசியல்ரீதியான காரணமாக தேசியவாதத்தின் எழுச்சியையே என்னால் இனங்காண முடிகிறது. ஹிட்லர், ஸ்ராலின் ஆகிய இரண்டு மோசமான சர்வாதிகாரிகள் இதற்கு நல்ல உதாரணம்.
எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்கின்ற போலி அதிகார மாயையின் கவர்ச்சி மக்களிடம் ஏற்படுத்திய மிக மோசமான விளைவு இது.
இந்நாட்டு மன்னர்கள் எல்லோரது புலன்களையும் வன்முறையால் கட்டி அதன் கொடும் பயன்களினூடாக தனது நலன்களைப் பேணுகிறது உண்மையான அதிகார மையம்.
>ஹிட்லர், ஸ்ராலின் ஆகிய இரண்டு மோசமான சர்வாதிகாரிகள் இதற்கு நல்ல உதாரணம்.
ReplyDelete2009 இல் இலங்கையில் ஒருவன் மேலேயுள்ள இரண்டு பேரையும் நல்ல பிள்ளைகளாக்கிற மாதிரி முள்ளிவாய்க்கால், முள்ளிவாய்க்கான் என்றொரு இடத்தில் 'தர்மயுத்தம்' ஒன்று செய்தானாமே?
முள்ளி வாய்க்கால் என்று ஒரு இடம் இல்லை என்று நினைக்கிறேன். கரையாம் முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் என இரண்டு இடங்கள் இருந்தன். ஆனால் அந்த நாசகார யுத்த்தின் இறுதி நாட்களில் வெள்ளாம் முள்ளிவாய்க்கால் உள்நாட்டு வெளிநாட்டு ஊடகங்களில் எல்லாம் வெள்ள முள்ளிவாய்க்கால் என்றே கூறப்பட்டு வந்தது. இவை போன்றவற்றுக்கெல்லாம் வலுவான அடிப்படைக் காரணஙகள் இருக்கின்றன. அவை பேசாப் பொருட்களாக மறைந்துள்ளன. எதிர்காலத்தில் அவை கட்டாயம் பேசப்படும். உடனே அல்ல... சில வருடங்களாவது போக வேண்டும் என்று நினைக்கிறேன்.
ReplyDeleteதர்மயுத்தம் என்று ஒன்று இல்லை. சகல யுத்தங்களும் அதர்மமானவைதான்.
ReplyDeleteசூரன் போராயினும் ராமன் போராயினும்.... யுத்தங்கள் அதிகாரங்களை கைப்பற்றுவதற்காகவே நடாத்தப்பட்டன. விடுதலைக்கும் யுத்தத்துக்கும் எந்த வித சம்பந்தமுமில்லை. ஒரு அதிகார மையத்திலிருந்து இன்னொரு அதிகார மையத்துக்குள் நாம் போய்ச் சேர்வதற்காக இரத்தமும் கண்ணீரும் சிந்தத் தேவையில்லை. யுத்தங்கள் நடாத்தப்படும்போது ஏதோ ஒரு வகையில் பங்காளராக உள்ள நாம் உணர்ச்சி வேகத்தில் அதை உணர்வதில்லை. யுத்தம் முடிவடைந்ததும் பெற்ற விளைவுகளையும் விளைச்சல்களையும் சீர்தூக்கிப் பார்க்கும் போது தான் எமக்கு புரிய வரும்.
எதற்கும் ஒரு இடைவெளி தேவை நண்பரே.
காலம் பெரியதொரு ஆசான்.
"தர்மயுத்தம்" என்று முரண் நகைத் (sarcasm) தொனியிற் சொன்னேன் நண்பரே.
ReplyDeleteமுள்ளி வாய்க்கால் என்ற பெயரல்ல முக்கியம் , அங்கு முழு உலகமும் கைகட்டிப் பார்க்க ஒரு மனிதக் கொலை (holocaust) நடந்தது. எதிரி கொல்லப்பட்டது வெள்ளாளனா அல்லது கரையானா என்று பார்க்கவில்லை.
அதற்காக சாதிப் பிரச்சினை ஒரு பேசாப்பொருள் என்று நான் சொல்லவில்லை.