கடவுள் வாழ்த்து
நானும் ஒரு ப்ளொக்கனாக உத்தேசித்துள்ள இச்சுப மூகூர்த்த சுப வேளையில்...
தமிழ் எழுத்தாளர்களிடம் கடவுள் மாட்டிக் கொண்டதைக் கொண்டாடி வாழ்த்த வேண்டாமோ..?
கடவுள் புதுமைப்பித்தனுக்குப் பிரத்தியட்சமானபோது
அவர் கடவுளை தனக்கே உரிய பாணியில் கிண்டல் பண்ணுகிறார்.
ஜெயகாந்தனோ ஒரு மூத்திரச் சந்தில் கடவுளைக் கத்தியால் குத்தி விடுகிறார்.
ஷோபா சக்தி கடவுளுக்கு வெடி வைக்கிறார்.
முதல் வெடி கடவுளின் கண்ணைப் பொத்தி விழுந்ததாம்.
யோ. கர்ணன் கடவுளை முள்ளிவாய்க்காலுக்கு கூட்டிப் போகிறார்.
கடவுளை புதைகுழிக்குள் இறக்கி அவரை கொடூரமாகக் கொல்ல எத்தனிக்கும் முன்னர் கைத்தொலைபேசியால் அவரை படம் எடுக்கிறார்.
புதுமைப்பித்தனுக்கும் யோ. கர்ணனுக்குமிடையில் ஏறத்தாள அறுபது வருட இடைவெளி இருக்கிறது.
அதாவது அறுபது ஆண்டு காலத்துக்குள் தமிழ் கதையுலகில் கடவுள் கண்ட பரிணாம வளர்ச்சி இது.
தமிழ்ப் பண்பாட்டில் அறுபது ஆண்டுகளில் ஒரு முழுச் சுழற்சி நிகழ்கிறது.
இது ஒரு சுவாரசியமான கணக்கு.
எமது பண்பாடு ஏன் இப்படி அவலமாக மாறிவிட்டது?
இனி வரும் எழுத்தாளர்கள் கடவுளைக் கண்டால் என்ன செய்யப் போகிறார்கள்...?
வாசகர்கள், விமர்சகர்கள் யாராவது தகுந்த பதில் சொல்லக்கூடாதா இதற்கு....!
நான் கடவுளை கண்டால் ....
வாழ்க்கை சில சமயங்களில் மலர் உதிர்ந்த காம்பாக ஆகிப் போவது ஏன் என்று அவரைக் கேட்பேனோ..?
அல்லது அவருடன் பேசாமல் விட்டு விடுவதே உசிதம் என்று ஒதுங்குவேனோ...?
இந்த நவீன இலக்கியக்காரர் ஏன் இப்படிக் குடும்பி பிடிச் சண்டை/குழாயடிச் சண்டை பிடிக்கிறார்கள் என்று கேட்டுச் சொல்லக் கூடாதா?
ReplyDeleteஎல்லாவற்றுக்கும் “யார் பெரிசு” என்ற ஆவலாதிதான் காரணம். பிரம்மாவும் விஷ்ணுவும் சிவனின் அடிமுடி தேடிய கதை போலத்தான் இதுவும். நவீன எழுத்தாளர் சணடைகளின் அடிமுடி தேடப் புறப்பட்டால் கடவளும் களைத்து, பின்நவீனத்துவவாதியாகி தூஷணம் பேச வெளிக்கிடுவார் போலும்.
ReplyDelete>கடவளும் களைத்து, பின்நவீனத்துவவாதியாகி தூஷணம் பேச வெளிக்கிடுவார் போலும்.
ReplyDeleteஆங், இதைவைத்து ஒரு பின்நவீனத்துவக் கதை எழுதலாம் போலுள்ளது. கடவுள் இறங்கி வாறார். முதலில் உத்தம தமிழ் எழுத்தாளர் ஒருவரைச் சந்திக்கிறார். அவர் 'காயகல்ப எழுத்தாளர் ஒருவரைப் பற்றித் திட்ட, ஒரு ஆர்வக்கோளாற்றினால், உடனே அந்த 'நிவேதன' எழுத்தாளைரச் சந்திக்கப் போகிறார். அவர் தனக்குத் தெரிந்த வசைகளைச் சொல்லித் திட்டுகிறார். தாங்கமுடியாத கடவுள் மென்மையானவர்கள் என்று நினைத்து சில பெண் கவிஞர்களைச் சந்திக்கப் புறப்படுகிறார். அவர்கள், மனித உடலில் உள்ள இசகு பிசகான பாகங்ளை வைத்து பெரிய பெரிய கவிதைகளை இயற்றுகிறார்கள்.
வெறுத்துப்போன கடவுள் தேவலோகம் போய் தூஷண வார்த்தைகளை அங்கு பரப்புகிறார்.
கருத்துக்கு நன்றி சக்திவேல். பின் நவீனத்துவத்தைப் பற்றி மிக நீண்ட உரையாடல்களை நிகழ்த்தலாம். இனி வரும் நாட்களில் கொஞ்சமாவது முயற்சிப்பேன்.
ReplyDelete